கொரோனா வைரஸ்: வெற்றியை அடைந்து விட்டதாக எண்ணும் நேரமல்ல- அனில் ஜாசிங்க

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விடயத்தில் நாம் வெற்றியை அடைந்து விட்டதாக எண்ணுகின்ற நேரமல்ல இது என  சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்றை தடுப்பதற்கு அனைவரும் முதலில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதாவது தனிமைப்படுத்தல் சட்டத்தை முடிந்தளவு பின்பற்றுங்கள்.

சிங்கப்பூர், நியூஸ்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் என்ன நேர்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்.

குறித்த நாடுகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த சிலர் மீண்டும் அதே தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

அதாவது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலப்பகுதியின் இடையிலும், இறுதியிலும் 46 வழிமுறைகளை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

இதில் கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் ஆகியவையே பிரதானவையாகும்.

ஆனால் இவ்விடத்தில் பொதுமக்கள், சில நிறுவனங்கள் குறித்த வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அதாவது எம்மை விட அபிவிருத்தி அடைந்த சில நாடுகள் கூட குறித்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் இன்னும் தடுமாறுகின்றது.

ஆகவே நாமும் அதாவது தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற தவறும் பட்சத்தில் சமூகத்தில் அதிகளவு பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம்” என அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.