நிந்தவூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
அம்பாறை- நிந்தவூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி, தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது வீடுகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் டெங்கு பரவும் வகையில் காணப்பட்ட இடங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள், சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
குறித்த செயற்பாட்டின்போது 1210 வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 32 பேருக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதுடன் 68 பேருக்கு எதிராக சிவப்பு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 326 இடங்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை