வவுனியாவில் எட்டுகால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி
வவுனியாவில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நெடுங்கேணி நைனாமடுப் பகுதியிலேயே இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டியொன்று நேற்று (சனிக்கிழமை) 3 மணியளவில் பிறந்துள்ளது.
நைனாமடுப்பகுதியில் சீதாகோபால் ஆறுமுகம் எனும் அரசியல் கைதி ஒருவரின் வீட்டிலையே இவ்வாறு விசித்திர ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.
இவர், 2017ஆம் ஆண்டில் இருந்து வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். இதில் ஒரு ஆடுதான் அதிசய குட்டியினை ஈன்றுள்ளது.
இந்த ஆட்டுக்குட்டி இறந்து பிறந்துள்ள போதிலும் அதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் படையெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை