எம்.சி.சி. தொடர்பான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை மக்கள் பார்வைக்காக

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான உடன்படிக்கை குறித்த மீளாய்வுக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக இணையத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

அதற்கமைய கீழ்வரும் இணைத்தள முகவரிக்குள் பிரவேசித்து குறித்த அறிக்கையை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.president.gov.lk/ta/

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராய்வதற்காக பேராசிரியர் லலிதஸ்ரீ தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.

குறித்த குழு கடந்த 6 மாதங்களாக இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்தது. அத்தோடு இந்த விடயம் தொடர்பாக பல்வேறு துறையினரிடமும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கேட்டறிந்து, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அறிக்கை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மக்கள் பார்வைக்காக இணையத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.