சிறுபான்மை மக்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவுக்கு அதிகரித்துள்ளது- ராஜபக்ஷ
சிறுபான்மை மக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பது அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் மாவட்ட வேட்பாளர் வைத்தியக் கலாநிதி திலக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்கள் சந்திப்பில் திலக ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “அம்பாறையில் பொதுஜன பெரமுனவை ஆதரிக்க பெரும்பாலான மக்கள் முன்வந்துள்ளனர்.
அந்தவகையில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக போட்டியிடுகின்ற என்னை, நாடாளுமன்றம் அனுப்புவதன் ஊடாக சிறுபான்மை மக்களாகிய உங்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்றால் இனம் தெரியாத பயம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.
எனவே குறித்த அச்சத்தை தமிழ் மக்களிடத்தில் இருந்து நீக்கி, தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை