முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு உட்பட மேல் மாகாணத்திலேயே இவ்வாறு முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்களே கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை