கொரோனா தொற்றில் இருந்து மேலும் 17 பேர் மீண்டனர்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று மட்டும் 17 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2037 பேரில் இதுவரை 1,678 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் சமூக பரவல் நாட்டில் இல்லை என்பதனால் நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த பகுதியளவிலான ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் தொற்று உறுதியானவர்களில் 348 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதோடு 40 பேர் நோய் தொற்று சந்தேகத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை