மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மேலதிக வகுப்புகளை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 100 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்காக இணைத்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

100 மாணவர்களை அனுமதிக்க முடியாத தனியார் வகுப்புக்களில் 50 சதவீத மாணவர்களின் எண்ணிக்கையானோருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவர்களுக்கு மேலுதிக வகுப்புகளை நடத்தும்போது சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.