ராஜித மற்றும் சம்பிக்க கப்பம் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது- விஜயதாச

முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அவன்காட் நிறுவனத்திடமிருந்து பெருந்தொகையான பணத்தை  கப்பமாக பெற்றுள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயங்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ராஜித சேனாரத்ன 2கோடி ரூபாயும் சரத் பொன்சேகா 3.5 கோடி ரூபாயும் சம்பிக்க ரணவக்க 35 இலட்சமும்  அவன்காட் நிறுவனத்திடமிருந்து கப்பம் பெற்றுள்ளனர் என விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் விஜயதாச ராஜபக்ஷவின் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர்கள் மூவரும் மறுத்துள்ளதுடன் இவ்விடயம் உண்மையென்றால் அதனை நிரூபித்து காட்டுமாறு சவால் விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.