சஜித் பலவீனமானவர் என்பது ஹரீன் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது- பிமல்
சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்த ஹரீன் பெர்ணான்டோ விவகாரத்தில் சஜித் பிரேமதாச செயற்பட்ட விதம் அவர் பலவீனமாவர் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோவுக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் இடம்பெற்றுள்ள சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பிமல் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “பேராயர் விடயத்தில் ஹரீன் தான் தெரிவித்த கருத்து தொடர்பாக உறுதியாக இருந்தார்.
ஆனால் சஜித், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை காண்பதற்கு ஹரீனை அழைத்துச் சென்று, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஹரீன் விவகாரத்தில் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் சஜித் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
அதாவது தற்போது சஜித், கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசியலை பின்பற்றாமல் மக்களை கவரக்கூடிய ஜனரஞ்சக அரசியலையே பின்பற்றுவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை