மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வழங்கிய தீர்வு
மேலதிக வகுப்புக்களை சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கும் வகையில் இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.
மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அகில இலங்கை தொழில் சார் வரிவுரையாளர்களின் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை அறிவுருத்தியது.
குறிப்பாக ஆயிரத்திற்கு கூடுதலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கிய மேலதிக வகுப்புக்களை 250 மாணவர்களுக்க வரையறுப்பது சிரமமாகுமென விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.
மேலும் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் மேலதிக வகுப்புகள் நடைபெறுவது தொடர்பான துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதற்கான கோரிக்கையும் ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டது.
இதேவேளை விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதை தவிர்ப்பதற்கு ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள ஒரு பதிவின் படி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் முழுமையான ஆலோசனையின் பின்னர் பரீட்சை தொடர்பான திகதிகளை மறுபரிசீலனை செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று காரணமாக க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்க தோற்றகின்ற மாணவர்களுக்கு 5 மாதங்களுக்கும் கூடுதலான காலம் கல்வி கற்பதற்கு கிடைக்கவில்லை. மேலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கும் இந்நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை