மனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்

மனிதாபிமானம் இல்லாது தொடர்ந்தும் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மோதரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் காலத்தில், இந்த அரசாங்கம் மக்களுக்காக எந்த நிவாரணத்தை வழங்கியுள்ளது என கேட்க விரும்புகிறேன்.

உலகிலேயே இன்று எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் இல்லை.

இதுவா மக்கள் ஆட்சி? நாம் ஒகஸ்ட் 5 ஆம் திகதி பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்று, அரசாங்கத்தை ஸ்தாபித்து 24 மணிநேரத்தில் எரிபொருளின் விலையை குறைப்போம் என்பதை இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்கூட மக்களுக்கு ஒழுங்காக சென்றடையவில்லை. இந்த அரசாங்கத்தக்கு மக்களின் துயரம் தெரியவில்லை. மனிதாபிமானமே இல்லாமல்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த பொய்யான அரசியல் கலாசாரத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.