விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வவுனியா இளைஞர் வெளியிட்டுள்ள கருத்து

ஆயுதம் தாங்கிய ஒளிபடம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வவுனியாவை சேர்ந்த இளைஞரிடம் மூன்று மணிநேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு சென்று வந்த இளைஞரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வவுனியாவிலுள்ள அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணித்தலைவரின் ஆயுதம் தாக்கிய புகைப்படம் ஒன்றினை எனது முகநூலில் அண்மையில் பதிவேற்றம் செய்திருந்தேன்.

அதற்காகவே, பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் என்னை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் தொடங்கி பிற்பகல் 12 வரை என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த புகைப்படம் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளிவந்தமை தொடர்பாகவும் இந்த விடயத்துடன் தொடர்புடையவரின் விபரங்களும் விசாரணைகளின்போது மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.