யாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மிருசுவில் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற பிரதமர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார்.

அந்த சந்திப்பினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட அவரும் அவருடைய பதுகாப்பு பிரிவினரும் இன்று அதிகாலையளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் வரும் வழியில் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் வந்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வாகனம் பெரிய அளவில் சேதத்திற்கு உள்ளானபோதும் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.