இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் – சஜித்

இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எனது வெற்றிக்காக முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாரிய தியாகங்களை செய்தார்கள். அவர்கள் மட்டும் இல்லை அவர்கள் சார்ந்த கட்சிகளும், கட்சிகளின் பிரதிநிதிகளும் எங்களின் வெற்றிக்காக பாடுபட்டார்கள்.

எனவே நான் நன்றி உள்ளவன் என்ற வகையில், செய்த உதவிக்கு எதிர்காலத்தில் இந்த மக்களுக்கான அனைத்து அபிவிருத்திகளையும் அவர்களுடைய பாதுகாப்பையும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களினது  பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் உறுதிப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுப்பேன் என்கின்ற உத்தரவாதத்தை தருகின்றேன்.

இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும். இந்த கிருமியின் ஊடாக நாடு படுகின்ற துன்பங்களை நீங்கள் அறிவீர்கள்.

ஒற்றையாட்சி என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இங்கு வாழ்கின்ற அனைத்து சமூகங்களும், தங்களுடைய வாழுகின்ற உரிமை, சம உரிமை, அரசியல் கலாச்சார உரிமைகளை பேனிப்பாது காக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்காக நாங்களும் பாடுபட வேண்டி உள்ளது.

குறிப்பாக சட்டத்தில் மட்டும் ஒற்றையாட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தால் ஒருபோதும் அதனை நடை முறைப்படுத்த முடியாது. அதற்காக பல தியாகங்களையும் முன்னெடுப்புக்களையும் நாங்கள் செய்ய வேண்டியுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.