பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவரை சந்தித்து பேசினார் சுரேஸ்!
பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.
இன்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் இருக்கக் கூடிய பாதுகாப்பு நிலவரங்கள், தொடர் கைதுகள், இராணுவ பிரசன்னங்கள் போன்றவை தொடர்பாகவும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாகவும், தமிழ் மக்களினுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை