தேர்தலில் வென்றதன் பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம் – சுஜீவ சேனசிங்க
தேர்தலில் வென்றதன் பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய மக்கள் சக்தி 115 ஆசனங்களை கைப்பற்றும்.
சில ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் பயணத்திற்காக மக்களில் சிலர் அடிமைகள் போன்று செயற்பட்டு இனவாதத்தை தூண்டுகின்றனர்.
காடையர்கள், கப்பம் பெறுபவர்கள், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை