அபிவிருத்திகளுக்காக மட்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை! பா.அரியநேத்திரன்,மு.பா.உ.
தமிழ்தேசியகூட்டமைப்பு 2001,ம் ஆண்டு தேசியதலைவர் பிரபாகரனின் வழிப்படுத்தலில் உருவாக்கப்பட்டது அபிவிருத்திகளைமட்டும் செய்வதற்கல்ல தமிழ்தேசிய உறுதியுடன் வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமையையும் வென்றெடுப்பதற்கே என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பாக 6 ம் இலக்கத்தில் வேட்பாளராக போட்டியிடும் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பிரசார அலுவலகம் திறப்பு நிகழ்வு இன்று 01/07/2020 திங்கள் கிழமை மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் மண்முனை வடக்கு இலங்கை தமிழரசு கட்சிகிளை தலைவருமான வேலிப்பிள்ளை தவராசா தலைமையில் இடம் பெற்றது அந்த கூட்டத்தில் மேலும் கூறுகையில்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001 உருவாக்குவதற்கு உந்து சக்தியாக மட்டக்களப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தில் ஊடாக நானும் பங்பேற்றவன் என்ற அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏன் உருவாக்கப்பட்டது என்பது எனக்கு நன்கு தெரியும்.
தமிழ்தேசிய்கொள்கையுடன் எமது விடுதலையை வென்றெடுக்கும் அரசியல் சக்தியாக்செயல்படுவதே முதலாவது நோக்கம் அந்த நோக்கத்தில் இருந்து எள்ளளவும் விலகாமல் ஏனைய அபிவிருத்திசார்ந்த விடயங்களை மேற்கொள்வதும் எமது கடமையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் 16,அரசியல் கட்சிகளும், 22, சுயேட்சைகுழுக்களுமாக்38, குழுக்களை சேர்ந்த 304,வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் இவர்களில் 174, முஷ்லிம்களும்,107,தமிழரும்,23,
தமிழ்வாக்குகளை்சிதறடிப்பதற்கா
மட்டக்களப்பு மாவட்டத்தில் 313000, தமிழ் வாக்காளர்களும், 93000 முஷ்லிம் வாக்காளர்களும் சொற்ப அளவாக சிங்கள வாக்காளர்களுமாக 409077, வாக்காளர்கள் உள்ளனர்.
இலங்கை தேர்தல் வரலாற்றில் 2004,ம் ஆண்டுமட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பில் மெறமுடிந்தது அதற்கு காரணம் தமிழ்மக்கள் எல்லோரும் ஒரே கொள்கையுடன் இலட்சியத்துக்காக ஒன்றினைந்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்தமையே இதற்கு காரணம்.
2004,ம் ஆண்டு போல் இந்தமுறையும் தமிழ்மக்கள் அனைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மட்டும் அதன் சின்னமான வீட்டுசின்னத்திற்கு வாக்களிப்போமானால் கடலடாயம் நான்கு தமிழ் உறுப்பினர்களை நாம் மெறமுடியும் இதனை அனைவரும் முரிந்து கொள்ளவேண்டும் எனவும் மேலும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை