கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 29 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 29 கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

அதற்கமைய குணமடைந்த மொத்த கடற்படையினரின் எண்ணிக்கை 877 ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 29 கடற்படை வீரர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.