அவன்காட் விவகாரம்- ராஜித 200இலட்சம் ரூபாய் கப்பம் பெற்றதற்கான ஆதாரம் வெளியானது
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 2015ஆம் ஆண்டு அவன்காட் ஊடாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் 200இலட்சம் ரூபாய் காசோலை தொடர்பான ஆதாரங்களை கொழும்பில் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவன்காட் நிறுவனம் தொடர்பாக தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத் சவால் விடுத்திருந்தார்.அதற்கமையவே அவர் இந்த ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக விஜயதாச ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “அவன்காட் நிறுவனம், ராஜித சேனாரத்னவுக்கு 200 இலட்சம் ரூபாய் கப்பமாக கொடுத்ததாக அதன் உரிமையாளர் என்னிடம் கூறினார்.
எனவே, அவ்விடயம் தொடர்பான ஆதராங்கள் இருந்தால் தருமாறு உரிமையாளரிடம் கோரியிருந்தேன். அந்த ஆவணங்களே இவைகளாகும்.
அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு 08 ஆம் மாதம் 11 ஆம் திகதி 50இலட்சம் ரூபாய் வழங்கிய காசோலை, எம்மிடம் இருக்கின்றது.
அதேபோன்று மற்றுமொரு 50 இலட்சம் ரூபாய்க்கான ஆதாரங்கள் மற்றும் குறித்த காசோலையை வங்கியில் மாற்றியமைக்கான ஆதாரங்களே இவைகளாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை