மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

அதனைக் கடத்திச் சென்றவர்கள் கடலில் வீசிவிட்டு படகில் தப்பித்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, படகு ஒன்றிலிருந்து பொதிகள் கடலில் வீசப்படுவதை அவதானித்துள்ளனர்.

அதனை துரத்திச் சென்ற போது, படகில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதிகளை மீட்டு ஆராய்ந்த போது அவற்றுள் கஞ்சா போதைப்பொருள் உள்ளமை கண்டறியப்பட்டது.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.