நாட்டை இராஜதந்திர மிதிவெடிகளில் இருந்து காப்பாற்றுவேன்- விமல்

நாட்டை இராஜதந்திர மிதிவெடிகளில் இருந்து காப்பாற்றுதற்கு ஏற்றவகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தல் தொடர்பான அரசியல் கொள்கைகளை மல்வத்த அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் விமல் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தின் காலத்தில், அதாவது இப்போது எதிர்பார்த்துகொண்டு இருக்கின்ற மிலேனியம் சவால் உடன்படிக்கையை போன்ற இராஜதந்திர மிதிவெடிகளில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் எங்களது ஆட்சி உறுதிபடுத்தப்பட்டதன் பின்னர் சூட்சுமான முறையில் செயற்படுவேன் .

இதேவேளை முன்னைய அரசாங்கத்தின்  செயற்பாடுகளில் ஒன்றுதான், துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு  வழங்கின்றமையாகும்.

எனவே ஏனைய நாடுகளுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை மிகவும் கவனமாக கையான்றுதான் அதிலிருந்து விடுபட வேண்டும்.

மேலும் முன்னைய அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அத்துடன் எங்களுக்கு நாடாளுமன்றத்தின் அதிகாரம் கிடைக்கப்பெற்றவுடன், நாட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏனைய நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.