கொழும்பு – ஜிந்துபிட்டியை முடக்க வேண்டிய அவசியம் இல்லை: அதிகாரிகள் தெரிவிப்பு
நோய் தடுப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதால் கொழும்பு – ஜிந்துபிட்டிய பகுதியை முடக்கவேண்டிய அவசியமில்லை என கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
ஜிந்துபிட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டுபேரை சோதனைக்கு உட்படுத்தியதில், அவர்கள் எவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 29 குடும்பங்களை சேர்ந்த 154 பேரை அங்கிருந்து வெளியேற்றி தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்புவதற்கு தீர்மானித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நோய் தடுப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதால் அந்த பகுதியை முடக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை