பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரம் அநுராதபுரத்தில் ஆரம்பம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தலாவ-தம்மென்னாவ சுதந்திர பூங்காவில் இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.
கருத்துக்களேதுமில்லை