கடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த முதலாம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நள்ளிரவு வரையான காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடத்தப்பட்ட சோதனைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள், ஆயுதம் மற்றும் சட்டவிரோதமான மதுபான விற்பனை தொடர்பாக 789 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த 24 மணி நேரத்தில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 638 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.