மோசடிகள் குறித்த விசாரணைகள் கிரிக்கட் சபையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் – ஜனகன்!
மோசடிகள் குறித்த விசாரணைகள் கிரிக்கட் சபையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எங்கள் நாட்டின் பெருமை என்று சொன்னால் ஒன்று நாட்டில் உள்ள தேயிலை அடுத்து கிரிக்கட். இன்று உலகத்தில் கிரிக்கட்டினை அறிந்து கொள்ளும் மார்க்கங்களாக இவை காணப்படுகின்றன.
இலங்கையின் தேயிலைக்கு எவ்வளவு மதிப்புள்ளதோ அதுபோன்றே இலங்கையின் கிரிக்கட்டிற்கும் மதிப்புள்ளது.
தேயிலையின் பெருமையை உலகிற்கு கொண்டு வந்தவர்கள் மலையக தோட்ட தொழிலாளர்கள் அதேபோன்று கிரிக்கட்டின் பெருமையை உலகிற்கு கொண்டு சென்றவர்கள் நம் நாட்டின் கிரிக்கட் வீரர்கள்.
ஆனால் தற்போதைய அரசாங்கமானது இந்த இரண்டு விடயங்களையும் வைத்து கொண்டு இன்று அரசியல் செய்கின்றது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை