கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு மாணவன் உயிரிழப்பு- கல்முனையில் சோகம்

கல்முனை பகுதியிலுள்ள குளமொன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட  பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயின்று வந்த, மோ.ஜதுர்சன்(வயது. 10) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.