பிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை
14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் இல்லாமல் 50 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜூலை 10 வெள்ளிக்கிழமை முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரித்தானியா நேற்று அறிவித்தது
இருப்பினும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் குறிப்பாக சமூக தொற்று பரவவில்லை இல்லை என அறிவிக்கப்பட்ட இலங்கை குறித்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
“குறைந்த ஆபத்து” என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து பயணிகள் இங்கிலாந்துக்கு வரும்போது சுய தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என பிரித்தானியா அரசு அறிவித்திருந்தது.
குறைந்த ஆபத்து என பட்டியலிடப்பட்ட நாடுகளில் ஜேர்மனி, நியூசிலாந்து, நோர்வே, போலந்து, ஹொங்கொங், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகளில் அமெரிக்காவும், சீனாவும் உள்ளன.
இதேவேளை சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் இதேபோன்ற பட்டியலை வெளியிட்டது, இதிலும் இலங்கையும் அமெரிக்காவும் சேர்க்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை