ஜூலை 6 ஆம் திகதி 2 ஆவது கட்டத்தின் கீழ் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்
நான்கு கட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவை அடுத்து, தரம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், உயர்கல்வி அமைச்சு, அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி செயலணி அதிகாரிகள் ஆகியோருடனான கலந்துரையாடியதைத் தொடர்ந்து பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக தரம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன.
மேலும் மூன்றாம் கட்டம் ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன்போது தரம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிகைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நான்காம் கட்டமாக தரம் 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை