விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அனுமதி
விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளர் ஒருவருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் குறித்த உதவியாளர் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல் அவசியம் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபர், பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளராக இருக்கக்கூடாது எனவும் ஏனைய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாகவும் சுயேட்சைக்குழு தலைவராகவும் அல்லது வாக்குச்சாவடியிலுள்ள பிரதிநிதியாகவும் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளர்களை அழைத்துச் செல்வதற்கான தகுதிச் சான்றிழை வாக்குச்சாவடியிலுள்ள அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களிலும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை