வாகன விபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உயிரிழப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக வடிகமன்னாவ (Ashoka Wadigamannawa) வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

குருநாகல், பாதெனிய பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தின் போதே அவர் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.