விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் வீரர்களாக பயன்படுத்தப்படவில்லை – கருணா
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக பயன்படுத்தவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார்.
மேலும் சிறுவர் படையினர் என்று கூறி விளம்பரப்படுத்தப்படும் ஒளிப்படங்கள் உண்மையான சிறுவர் வீரர்கள் அல்ல.
விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களை ஒருபோதும் வீரர்களாக பயன்படுத்தவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை