யாசகரின் வங்கி கணக்கில் பல இலட்சம் ரூபாய் வைப்பு- கொழும்பில் சம்பவம்
கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த பணமானது ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளரான மர்வின் ஜானா என்பவருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த 11 மாதங்களில், 1400 இலட்சம் ரூபாய் யாசகரின் பெயரில் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்திடிய தனியார் வங்கி ஒன்றில் கணக்குத் திறந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வங்கி புத்தகம் மற்றும் வங்கி அட்டை ஆகியவை போதைப்பொருள் விற்பனையாளரான மர்வின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனையாளரான மர்வின் ஜானா தடுப்பு காவலில் உள்ளார்.
கருத்துக்களேதுமில்லை