பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்த முக்கிய தகவல் வெளியானது!
பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து துணைவேந்தர்கள் இன்று(திங்கட்கிழமை) முதல் தீர்மானிக்க முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக குறித்த தீர்மானத்தினை மேற்கொள்ளுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் குறித்த அச்சம் காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்தநிலையில் சுமார் 115 நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை