அரிசி ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவர் காயம்
ஏறாவூர் பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த லொறியில் இருந்த 400 அரிசி மூடைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துக்களேதுமில்லை