திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும்
திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி (50%) அல்லது அதிகபட்சம் 300 பேர் எனும் இரு எண்ணிக்கைகளில் குறைவான எண்ணிக்கை எதுவோ, அவ்வெண்ணிக்கையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், திருமண நிகழ்வில் கலந்துகொள்வோர், சமூக இடைவெளியைப் பேணுவதோடு, மண்டபங்கள் குறித்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் நாட்டில் பரவியதையடுத்து, மக்கள் கூடும் வகையில் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததைத் தொடர்ந்து, திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது.
அதற்கமைய திருமண வைபவங்களில் 100 விருந்தினர் மாத்திரமே பங்கேற்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை