வெலிக்கட சிறைக் கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!
கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்குள்ள 315 கைதிகளிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்து 315 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள. இது குறித்த அறிக்கை நேற்று வெளியானதாக தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் 40 பேர் கடந்த ஜூன் 27ஆம் திகதி வெலிக்கட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதன்படி சம்பந்தப்பட்ட சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் ஆகியோரை பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர்.
இதற்கிடையில், வெலிகடை சிறையிலிருந்து, ஜூன் 27 ஆம் திகதிக்கு பிறகு வீடு திரும்பிய கைதிகளைக் கண்டுபிடிக்க தேடல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை