ஹக்கீமின் வெற்றிக்கு உதவும் றிஷாத், தானே றிஷாதுக்கு உதவுவதான மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முனையும் ஹக்கீம்…

ஹக்கீமின் வெற்றிக்கு உதவும் றிஷாத், தானே றிஷாதுக்கு உதவுவதான மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முனையும் ஹக்கீம்…!
ஊடகங்களை தனது வாசிக்கேற்ப வளைப்பதில் மு.கா தலைவர் ஹக்கீம் வல்லவர். அவர் பக்கம் பிழை இருந்தாலும், மிகத் தந்திரமாக முறையில் மாற்றி விடுவார். தனது இயலாமைகளை கூட, ஊடக வாயிலாக சரி செய்துகொள்வார். தற்போது அ.இ.ம.கா தலைவர் றிஷாதிற்கு ஹக்கீம் வாக்கு சேர்த்து,
அவரது வெற்றிக்கு வன்னியில் உதவுவது போன்று சிலரை நம்பவும் வைத்துள்ளார். இதுவேஅவருடைய சாணக்கியம்.
உண்மை என்ன…?
அண்மையில் வன்னியில் நடந்த நிகழ்வொன்றில் மு.கா தலைவர் ஹக்கீம் அ.இ.ம.கா தலைவர் றிஷாதுக்கு வாக்களிக்குமாறு, தனது ஆதரவாளர்களிடம் கோரியிருந்தார். அங்கு அவர் அவ்வாறு கூறி விட்டு, மக்களிடம் அ.இ.ம.கா தலைவருக்கு மு.காவின் தலைவர் உதவுவதான பிரச்சாரத்தை, தனது
ஆதரவாளர்கள் மூலம் முன்னெடுத்துமிருந்தனர். அ.இ.ம.கா தலைவர் றிஷாத் வன்னியில் வெற்றிபெற ஹக்கீமின் உதவி தேவையில்லை. அங்கு அவரின் வெற்றி உறுதியானது. வன்னி ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு தேர்தல் மாவட்டம். இதில் முதல் நான்கு ஆசனங்களை தமிழர்கள் கைப்பற்றுவதற்கான வாய்ப்பே உள்ளது. எஞ்சிய இரு ஆசனங்களையும் முஸ்லிம் சார்பு அணி பெறுவதற்கான சாதகமுள்ளது. அங்கு முஸ்லிம்களிடையே உள்ள அணிகளில்
பெரும் பலம் பொருந்திய அணியாக அ.இ.ம.கா தலைவர் றிஷாதின் அணியை குறிப்பிடலாம்.

ஐந்தாவது ஆசனத்தில் அ.இ.ம.கா தலைவர் றிஷாதின் பெயரிருக்கும். இதனை யாரும் மறுக்க முடியாது. யாராவது மறுப்பாராக இருந்தால் அது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இருக்க வேண்டும்.
அல்லது அவர் அரசியல் அறிவற்றவராக இருக்க வேண்டும். கடந்த முறை மஸ்தான் 7000 அளவான வாக்கையே பெற்று பாராளுமன்றம் சென்றிருந்தார். ஹுனைஸ் பாறூக் 7000 வாக்கை பெற முடியாமல் மஸ்தானிடம் தோல்வியை தழுவி இருந்தார். இவர்களா அ.இ.ம.கா தலைவர் றிஷாதுக்கு சவால் விடுக்க போகிறார்கள்?
இம் முறை வன்னியில் அ.இ.ம.கா தலைவரின் வெற்றி உறுதியாக இருக்கும் போது, ஏன் ஹக்கீம், தனது ஆதரவாளர்களை அ.இ.ம.கா தலைவர் றிஷாதுக்கு ஆதரவளிக்க கோர வேண்டும். இதுவே சிந்தனைக்குரிய புள்ளி. மு.காவின் தலைவர் ஹக்கீமுக்கு கண்டியில் அ.இ.ம.காவினரின் ஆதரவு
தேவை என்பதே அதிலுள்ள விடயம். வன்னியில் இவ்வாறு கூறிவிட்டு, கண்டியில் அ.இ.ம.கா ஆதரவாளர்களின் ஆதரவை கோரினால், பெற்றால் பரஸ்பரம் இருவரும் ஒருவொருக்கொருவர்   உதவுகிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடலாம். இதுவே அந்த தந்திரம். வன்னியில் இவ்வாறு கூறாது, கண்டியில் அ.இ.ம.காவினரின் ஆதரவை கேட்டால், மு.கா தலைவர் ஹக்கீமின் வெற்றிக்கு
அ.இ.ம.கா தலைவரின் பங்களிப்பு தேவை என்பது வெளிப்பட்டுவிடும். இது மு.காவின் தலைவர் இதுவரை கட்டிக்காத்த மானத்தை கப்பலேற்றி விடும் செயலாகிவிடும். இதுவே இன்றைய மு.கா தலைவரின் நிலையாகும்.

நான் கூறுவதை ஒரு முஸ்லிம் காங்கிரஸ் போராளியால் ஏற்க முடியாது. எம் தலைவரின் வெற்றிக்கு, நேற்று வந்த அ.இ.ம.கா தலைவரின் உதவி தேவை என்பதை ஏற்பது கடினம் தான். நாம் இன்னும் சில விடயங்களை ஆராயும் போது, அது உண்மை என்பதை நீங்கள் ஏற்கத்தான் வேண்டும்.

மு.காவின் தலைவர் ஹக்கீம் வன்னியில் அ.இ.ம.காவின் தலைவரை இலங்கை மக்களின் தலைவராக புகழ்பாடி, தங்களது ஆதரவாளர்களை அவரை ஆதரிக்குமாறு கோரியிருந்தார். இதுவரை அ.இ.ம.கா தலைவர் வன்னியில் எந்த மு.கா போராளியையும் அழைத்து ஆதரவு தேடவுமில்லை, கேட்கவுமில்லை,
அவர்களது புகைப்படங்களை முக நூலில் பதிந்து பெருமைப்படவுமில்லை. அந்த தேவையுமில்லை.
அவருக்கு மு.காவினர் யாராவது வாக்களிப்பார்களாக இருந்தால், அது வாக்கெண்ணிக்கையை அதிகரிக்கும் அவ்வளவு தான்.
கண்டியில் அ.இ.ம.காவின் போராளிகளை அழைத்து, தனக்கு ஆதரவு கேட்டிருந்தார் மு.காவின் தலைவர் ஹக்கீம். அதனை பெருமையாக முக நூலிலும் பதிவிட்டிருந்தார். முகநூலில் பதிவிட்டு பெருமைப்பட்டது, வேறு எதற்குமாகவல்ல, கண்டியிலுள்ள அ.இ.ம.காவின் முழு ஆதரவாளர்களின் வாக்கையும் பெறுவதற்கே. இந்த விடயங்களை நடுநிலையோடு நோக்குங்கள், மு.கா தலைவர்
ஹக்கீம் மிகவும் அடிமட்டத்துக்கு இறங்கி செயற்படுவதையும், அ.இ.ம.கா தலைவர் றிஷாத் அவருக்கு உதவுவதையும் அவதானிக்க முடியும். கேட்டால், மு.கா தலைவரே அ.இ.ம.கா தலைவருக்கு உதவுவதாக கூறுவார். இதனை அலட்டிக்கொள்பவரல்ல அ.இ.ம.கா தலைவர் என்பதுவே அவரது
வளர்ச்சியிலுள்ள பறகத்தின் விசேடம். இம் முறை கண்டியில் அ.இ.ம.கா ஆதரவாளர்கள் தேர்தல் களம் காண வேண்டுமென மிகவும்
உறுதியாக இருந்தனர். டெலிபோனில் கேட்பது, அல்லாது போனால் தனித்து களமிறங்குவது என்ற தீர்மானத்திலுமிருந்தனர். இது மு.கா தலைவர் ஹக்கீமின் வெற்றியை பாதிக்க கூடும் என்பதால், இத் திட்டத்தை அ.இ.ம.கா கை விட்டிருந்தது.

இம் முறை கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களது வாக்குகள் மிகக் கடுமையாக சிதறக் கூடிய வாய்ப்புள்ளது. இந் நிலையில் அ.இ.ம.காவும் தனித்து களமிறங்கினால் அது மு.கா தலைவரின் வெற்றியை நிச்சயம் பாதித்திருக்கும். இவ் விடயத்தில் இரு தலைவர்களுக்கு இடையில் சமூக நலனை
மையப்படுத்திய உடன்பாடு எட்டப்பட்டதான கதையுள்ளது. இந்த அனைத்து உடன்பாட்டிலும் இழப்பை சந்தித்தது அ.இ.ம.காவின் தலைவரே என்பதுவே கவனிக்கத்தக்கது. இது சாணக்கியத்தால் சாதித்ததாக அவர் நினைக்கலாம். ஒரு போதும் இல்லை… அ.இ.ம.கா தலைவரின் சமூக அக்கறையால்
நடந்தேறியவைகள். இம் முறை மு.கா தலைவர் ஹக்கீமின் வெற்றி கண்டியில் மிகவும் சவாலாக உள்ளது. வெற்றி பெறுவதாக இருந்தாலும், அது சிறிய எண்ணிக்கை வாக்காலான வெற்றியாக இருக்கும். இம் முறை
அ.இ.ம.கா தனித்து களமிறங்கி 10 000 அளவான வாக்கை பிரித்திருந்தால் கூட, மு.கா தலைவர் ஹக்கீம் படு தோல்வியை சந்தித்திருப்பார். அ.இ.ம.கா தலைவர் றிஷாத் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைவராக முடி சூடியிருக்க முடியும். இந்த தோல்வியை சாதகமாக பயன்படுத்தி, சமூக
நோக்கற்று இழி அரசியல் செய்பவரல்ல அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத். அங்கு மு.கா ஹக்கீம் தோல்வியை தழுவுவதை, ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவ இழப்பாக பார்ப்பவரே அ.இ.ம.காவின் தலைவர். கண்டியில் அ.இ.ம.காவுக்கு அவ்வளவு பலமுள்ளதா என கேட்கலாம். கடந்த உள்ளூராட்சி மன்ற
தேர்தலில் 9 சபைகளில் மாத்திரம் தனித்து, முதற் தடவை, தங்களது மயில் சின்னத்தில் களமிறங்கிய அ.இ.ம.கா 8 ஆசனங்களை பெற்றிருந்தது. மொத்தம் 12 300 வாக்குகளையும் பெற்றிருந்தது. அதே நேரம் மு.காவானது சில இடங்களில் மரத்திலும், சில இடங்களில் யானையிலும், இன்னும் சில இடங்களில் வண்ணாத்தி பூச்சியிலும், ஒரு சபையில் மனோ கணேசனுடனும் சேர்ந்து பல சபைகளில்
களமிறங்கி வெறும் 7 ஆசனங்களையே பெற்றிருந்தது. இப்போது கண்டியில் அ.இ.ம.காவின் பலம் என்னவென விளங்கும் என நினைக்கிறேன்.
ஒரு போதும் அ.இ.ம.கா தலைவர் றிஷாத் சமூக சிந்தனையற்ற அரசியல் செய்பவரல்ல. இந்த விடயத்தை கூட மிக தந்திரமாக ஊடக வாயிலாக கையாண்டு, தான் அ.இ.ம.கா தலைவருக்கு உதவுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார் மு.காவின் தலைவர் ஹக்கீம். இதுவே இரு
தலைவர்களுக்குமிடையிலான வேறுபாடு.
சிந்திப்போம்… செயற்படுவோம்….

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.