போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – பொலிஸார் விருப்பம்

போதைப்பொருள் கடத்தலில் குற்றவாளிகளாக இருக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என பொலிஸார் விரும்புகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் சந்தேகத்திற்கிடமான அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டு சட்டமா அதிபர் வழியாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனக் கூறினார்.

1979 க்குப் பின்னர் இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவில்லை, இருப்பினும், போதைப்பொருள் கடத்தலில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட அதிகாரிகள் எவருக்கும் எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும் என அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

18 பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளின் இழிவான நடத்தை முழு பொலிஸாரையும் தலைகுனிய வைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் எந்த ஊழல் அதிகாரிக்கும் இடமளிக்கவோ பாதுகாக்கவோ இலங்கை பொலிஸ் முற்படாது என்றும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.