ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ்.மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்.கிளிநொச்சி அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான டேவிட் நவரட்ணராஜ் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வில் ஜனநாயக இடது சாரி முன்னணியின் சார்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ்.கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ் உரையாற்றுகையில் ,
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அரச வேலைகளுக்கு மட்டுமே இளைஞர் யுவதிகள் முன்னுரிமை கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது அந்த மனோநிலை மாறவேண்டும் அதற்கு தனியார் தொழில்துறைகள் கைத்தொழில் நிலையங்கள் உருவாக்கப்பட்டு புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும்.
ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்னையினால் போதைப்பொருட்களுக்கும் சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்ற துப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
எனவே வாசுதேவ நாயக்காரவின் தலைமையில் களமிறங்கியுள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியாகிய எம்மை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பலப்படுத்தவேண்டும் அவ்வாறு நாம் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் கிராம அபிவிருத்தி கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றம் தொழில் வாய்ப்புக்கள் கலை கலாசாரங்களை வளர்த்தல் ஆகியவற்றில் துரிதமாக முன்னொடுப்போம்.
குறிப்பாக காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலைஆகிவற்றை மீளக்கட்டியெழுப்பு இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது எமது முக்கிய பணியாக இருக்கும். எனவே மக்கள் இம்முறை ஜனநாய இடது சாரி முன்னணியை பலப்படுத்தி எமக்கு ஆதரவினை வழங்கவேண்டும்” என்றார்.
கருத்துக்களேதுமில்லை