ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து நிலந்த ஜயவர்தனவிடம் நீண்ட நேர வாக்கு மூலம் பதிவு
அரச புலனாய்வு துறையின் முன்னாள் பிரதானியும் தற்போதைய கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவிடம், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து நீண்ட வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 நாட்களாக 152 மணி நேரம் வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குறித்த ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறினார்.
நாளொன்றுக்கு எட்டரை முதல் ஒன்பதரை மணி நேரம் வரை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிடம் இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் அடுத்து வரும் சில நாட்களும் இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னர், அதன் பொலிஸ் பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்க வேண்டும். இந்நிலையிலேயே நிலந்த ஜயவர்தன இவ்வாறு வாக்கு மூலம் வழங்கி வருகின்றார்.
குறித்த தாக்குதல்கள் இடம்பெறும்போது அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக நிலந்த ஜயவர்தன செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை