அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமாயின் சஜித்தை பிரதமராக்குங்கள்- ரிசாட்

அனைத்து  மக்களும் இன, மத பேதமின்றி ஒத்துமையாக வாழவேண்டுமாயின் சஜித் பிரேமதாசவை நாட்டின் பிரதமராக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன, மத பேதங்களுக்கு அப்பால் சகோர வாஞ்சையோடு இன மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகதான் சஜித் பிரேமதாசவை பிரதமராக்க நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

அந்தவகையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியினை பலப்படுத்துவதனூடாக, நாட்டில் நல்லதொரு ஆட்சியையும் நல்லதொரு நிர்வாகத்தினையும் ஏற்படுத்த முடியும்.

கடந்த காலத்தில் இந்த மாவட்டம் முன்னேற்றம் அடைய  வேண்டும் என்பதற்காக பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம்.

ஆகவே அதேபோன்ற சிறந்த செயற்றிட்டங்களை இந்த பகுதிகளில் இனிவரும் காலங்களிலும் முன்னெடுப்பதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்குங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.