எமது ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது- மஹிந்த
நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஐ.தே.க பிளவடைந்து காணப்படுகின்றமையினால் பொதுஜன பெரமுனவின் வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது.
மேலும் கடந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றன. ஆனால் இனிவரும் காலங்களில் அவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் இடம்பெறாது.
இதேவேளை குற்றச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை