தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் க.மயூரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலானது தமிழ் பேசுகின்ற மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எமது போராட்டங்கள் முடிந்து அரசியல் ரீதியான ஒரு எதிர்பார்ப்போடு இந்த தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.
அந்தவகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் பேசுகின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.
எங்களுடைய வாக்குகளைப் பிரிப்பதற்காக எங்களுடைய மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காக இங்கே பல சுயேட்சைகள், கட்சிகள் களமிறங்கியுள்ளன.
எங்களுடைய மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் அதிகளவாக உருவாக்குவதன் ஊடாக எமது பிரதேசத்தில் இருக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகள் தொடக்கம் உரிமை சார்ந்த பிரச்சினைகள் வரைக்கும் நாங்கள் தொடர்ந்து குரல்கொடுப்பதற்கு அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய வேண்டும்.
என்பதுதான், தன்னுடைய எதிர்பார்ப்பு அந்த விதத்திலே தற்பொழுது எங்களை விட்டு பிரிந்து சென்ற எங்களோடு இருந்து பிரிந்து சென்ற தமிழ் தேசியத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளே இருந்து பிரிந்து சென்ற பல மக்கள் பிரதிநிதிகள் இன்று எதிர்க்கட்சிகள் இருக்கின்றார்கள்.
அந்த விதத்திலே குறிப்பாக சொல்லப்போனால் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி விக்னேஷ்வரன் ஐயா தலைமையிலே இந்த புதிய கூட்டணி மாவட்டத்திலே உதயமாகி இருக்கின்றது அவர்கள் பெரும்பாலும் பெரும்பான்மையாக அதிகளவான ஆசனங்களை பெறப்போவது என்பது மிக அரிது அவர்கள் கீழே இருக்கின்ற எங்கது தமிழ் எங்களுடைய
சிங்கள தேசியவாதிகளோடு பேரம் பேசும் சக்தியாக அவர்கள் மாறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியம் அற்ற விடயம். எனவே மீன் சின்னத்துக்கு அளிக்கின்ற வாக்குகள் தேவையில்லாததாகும்.
எனவே, தமிழ் மக்கள் வாக்குகளை பிரயோசனம் இல்லாதவாறு மாற்றாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்னும் பலம்மிக்க ஒரு சக்தியாக மாற்ற வேண்டும்.
அத்துடன், கூட்டமைப்பில் இளைஞர்கள் பலர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் தேசியத்தினுடைய அடுத்தக்கட்ட அரசியலை இனிவரும் காலங்களிலே இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அதற்கான வாய்ப்புகளை தமிழ் பேசுகின்ற மக்கள் வழங்குகின்றபோது எங்களுடைய பிரச்சினைகளை இளைஞர்கள் ஊடாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச்செய்ய முடியும். இதற்கு, புத்தி ஜீவிகள், கல்விமான்கள் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரண்டு உங்களுடைய வாக்கினை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை