பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
கொழும்பில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் களமிறங்கியுள்ள வேட்பாளர் விமல் வீரவன்சவின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு, தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை, முத்தையா முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது குறித்த ஒன்றுக்கூடலில் விமல் வீரவன்சவிடம், வர்த்தகர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
மேலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விமலின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், உங்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை