கொரோனா தொற்று: தனியார் மருத்துவமனைக்கு தற்காலிக பூட்டு
கம்பஹா – றாகமவில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அங்கு அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன என்றும் இதைத்தொடர்ந்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அம்மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் கிடைக்கும் வரை மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை