மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள், மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.10 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த 117 இலங்கையர்களும், மாலைத்தீவிலுள்ள  சுற்றுலா விடுதிகளில் பணியாற்றிய ஊழியர்கள என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவருக்கும் பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.