அரசியலமைப்பினை திருத்துவதற்காக நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டோம் – நாமல்
அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்காக அரசியல்வாதிகளிடம் அடிபணிய வேண்டிய அவசியம் கிடையாமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஒருபோதும் தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாத கொள்கைகளை உடைய அரசியல்வாதிகளுடன் இணையமாட்டோம்.
இதேவேளை வடக்கிலும், தெற்கிலும் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட்டங்களில் ஈடுப்பட்டமைக்கு ஆரம்ப கால அரசியல் தலைமைகளின் தவறான தீர்மானங்களே காரணமாகும்.
மேலும் 30வருட கால யுத்தம் அனைத்து மக்களின் ஒத்துழைப்புடனே தோற்கடிக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தில் இனங்களுக்கிடையில் பிரிவினைவாதமே தோற்றுவிக்கப்பட்டது.
இதேவேளை அரசியல்வாதிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, அரசியலமைப்பினை திருத்த வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.
பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களுக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளது. எனவே அவர்களுடன் ஒன்றினைத்து இனவாதமற்ற தேசியத்தை நிச்சயம் கட்டியெழுப்புவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை