தமிழரசு கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் பிரசாரத்தின்போது மாரடைப்பால் மரணம்!
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேசசபை உறுப்பினரான கனகசுந்தரம் ஜெயக்குமார் என்பவரே உயிரிழந்தார்.
நேற்று (புதன்கிழமை) இலங்கை தமிழ் அரசுக் கட்சியினர் ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.
பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த உறுப்பினர் ஜெயக்குமார் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை