தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் உளநிலையையும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளையும் கருத்திற்கொண்டு வெளிநாடுகளைப் போன்று இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது சில சிறைக்கைதிகள் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டிருப்பதுடன், ஏனையோருக்கு தொற்றுப்பரவக்கூடிய ஆபத்துக்களும் காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போது அவர்களது உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையால் கைதிகள் உளவியல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.